அரசியல் இலங்கை செய்தி

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈராண்டுக்குள் 13,000 வீடுகள் – ஜனாதிபதி உறுதி

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ற்பாட்டில் மாத்தறை, வெலிகமவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்:

“வடக்கில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், வீடுகள் இன்றி இன்னமும் 13,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

போரினால் அவர்களின் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. வீடு அழிக்கப்பட்ட போது இரண்டு வயதாக இருந்த குழந்தைக்கு இப்போது 18 வயதாகிறது; அப்போது 16 வயதாக இருந்தவருக்கு தற்போது 32 வயதாகிறது. எனவே, அவர்களுக்குச் சொந்த வீட்டு உரிமையை வழங்க வேண்டியது அவசியமாகும்.

இதனடிப்படையில், ஆண்டுக்கு 6,500 வீடுகள் வீதம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 13,000 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும்.

அதேபோல், மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் உரிய தீர்வு வழங்கப்படும். இதற்கமைய, இந்த ஆண்டில் 60,000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன், அடுத்த ஆண்டில் இவ்வாறான வீட்டுத் திட்டங்கள் மேலும் விரைவுபடுத்தப்படும்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை