உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கிரீன்லாந்தில் ஆழமாக கால் பதிக்கும் அமெரிக்கா: ராணுவ தளங்களை அமைக்க ஏற்பாடு

கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் பனிப்போர்க் காலத்து இராணுவத் தளத்தை மீண்டும் திறக்கவும், கிழக்குக் கரையில் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் பனிப்போர்க் காலத்து இராணுவத் தளத்தை மீண்டும் திறக்கவும், கிழக்குக் கரையில் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று கையெழுத்தாகவுள்ளது.

அமெரிக்கா 1950-களில் தனது ‘ப்ளூயீ வெஸ்ட் ஒன்’ (Bluie West One) இராணுவத் தளத்தை மூடியதைத் தொடர்ந்து, சில டஜன் மக்கள் மட்டுமே வாழும் Narsarsuaq பகுதி மற்றும் டென்மார்க்கின் சிறப்புப் படையான ‘சிரியஸ் டாக் ஸ்லெட் ரோந்து’ (Sirius Dog Sled Patrol) குழு பயன்படுத்தி வரும் ‘மெஸ்டர்ஸ்விக்’ (Mestersvig) ஆகிய இடங்களிலேயே இந்த புதிய தளங்கள் அமைக்கப்படவுள்ளன.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே, அமெரிக்க நேரப்படி இன்று காலை 10:30 மணிக்கு (GMT 1430) இந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்தின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கையெழுத்தாகும் வரை இதில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதால், இது குறித்து டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகள் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இராணுவ அல்லது பொருளாதார வலிமையைப் பயன்படுத்த தயங்கப்போவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதன் தொடர்ச்சியாகவே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைகள் நேட்டோ அமைப்பிற்குள் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து, அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

பனிப்போர்க் காலத்தில் கிரீன்லாந்தில் 17 இராணுவ முகாம்களையும், 10,000-க்கும் மேற்பட்ட படைவீரர்களையும் அமெரிக்கா பராமரித்து வந்தது. ஆனால் தற்போது ‘பிடுபிக் விண்வெளித் தளம்’ (Pituffik Space Base) மட்டுமே இயங்கி வருவதுடன், அங்கு சுமார் 150 அமெரிக்கப் படைவீரர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி