இந்தியா செய்தி தமிழ்நாடு

மற்றுமொரு சிறப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் முதல்வர் விஜய்

தமிழகத்தில் அரச பாடசாலைகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அரச பாடசாலைகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பாடசாலையில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

முதல்வர் விஜய் இதில் பங்கேற்ற காரணத்தால் பாடசாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டனர்.

மேலும், முதல்வர் விஜயை காண்பதற்காக பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு வெளியில் திரண்டிருந்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி