வடக்கில் கடல்சார் சுற்றுலா சர்வதேச ஈர்ப்பை உருவாக்கும்
வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் புதிய முயற்சிகள், சர்வதேச அளவில் வடக்கு மாகாணத்தை நோக்கிச் சுற்றுலாவிகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘எல்லாளன் டூரிஸம்’ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக, யாழ்ப்பாணக் குடாக்கடலின் இயற்கை அழகை இரசிப்பதற்கும் பல்வேறு கடல்சார் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குமான விசேட படகுச் சுற்றுலா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத கடல்சார் வளங்களைச் சுற்றுலாத்துறையின் […]













