இலங்கை செய்தி

அறகலயவுக்கு வெளிநாட்டு நிதி: தேரர் பரபரப்பு தகவல்

சோழர்களாலும், முப்படை பலத்துடன் விளங்கிய விடுதலைப் புலிகளாலும்கூட பௌத்த சாசனத்தை அழிக்க முடியவில்லை. எனவே, ஐந்து ஆண்டுகளுக்காக மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்தால் பௌத்த சக்தியை ஒருபோதும் ஒழிக்க முடியாது எனப் பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

சோழர்களாலும், முப்படை பலத்துடன் விளங்கிய விடுதலைப் புலிகளாலும்கூட பௌத்த சாசனத்தை அழிக்க முடியவில்லை. எனவே, ஐந்து ஆண்டுகளுக்காக மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கத்தால் பௌத்த சக்தியை ஒருபோதும் ஒழிக்க முடியாது எனப் பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:

“எமது போராட்டத்துக்கு எவரிடமும் நிதியுதவி கோரவில்லை. ஆனால், மக்கள் தாமாக முன்வந்து எமக்கு உதவி வருகின்றனர். 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டத்தின்போது நானும் களத்தில் இருந்தேன். அந்தப் போராட்டத்துக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகள் கிடைத்தன.

எமது போராட்டம் மக்களின் இதயங்களுடன் தொடர்புடைய சுதந்திரப் போராட்டமாகும். அன்பு, கருணை ஆகியவற்றின் அடிப்படையில் போராடுகின்றோம். எவருடனும் முரண்படவில்லை. ஆட்சியாளர்கள் எமக்கு எதிராகச் சேறுபூசினாலும் நாம் அடிபணியமாட்டோம்.

வரலாற்றில் உயிரைக் கொடுத்தே எமது பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து வந்துள்ளோம். எல்லாளன் மன்னன் எம்மை அழிப்பதற்கு 44 ஆண்டுகள் முயற்சித்தார். ஆனால், துட்டகைமுனு மன்னன், தனது தந்தையான கவந்திஸ்ஸ மன்னனின் உதவியுடன் அவரைத் தோற்கடித்து முழு நாட்டையும் பாதுகாத்தார்.

சோழர்களிடம் நாம் மண்டியிடவில்லை. ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர்களால்கூட எமது பௌத்த மதத்தையும் சாசனத்தையும் இல்லாதொழிக்க முடியவில்லை.

வடக்கு, கிழக்கைக் கைப்பற்றி, வான், தரை மற்றும் கடற்படைகளைக் கொண்ட முப்படை பலத்துடன் விளங்கிய விடுதலைப் புலிகளால்கூட புத்த சாசனத்தை அழிக்க முடியவில்லை.

எனவே, ஐந்து ஆண்டுகளுக்கு மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்துள்ள, தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு அடிபணிவதாக நாம் கருதும் இந்த அரசாங்கத்தால் பௌத்த சக்தியை ஒருபோதும் ஒழிக்க முடியாது” என்றார் கஸ்ஸப தேரர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை