சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, 'மெக்கா ஒப்பந்தத்தின்' கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சவுதிக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த களமிறங்குமா பாகிஸ்தான்?

  • September 10, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ‘மெக்கா ஒப்பந்தத்தின்’ கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்லாமாபாத் எவ்வாறு தனது கடமைகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுப்பப்பட்ட […]

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் 84,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதநேயத் தேவைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. உலகம் செய்தி

நேபாளத்தில் பேரழிவு: $20.5 மில்லியன் அவசர நிதியுதவி கோருகிறது IOM அமைப்பு

  • September 10, 2026
  • 0 Comments

நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் 84,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதநேயத் தேவைகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ள அதேவேளை, சுமார் 4,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாகத் தேசிய பேரிடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் மேலாண்மை அதிகாரசபை (NDRRMA) தெரிவித்துள்ளது. இப்பேரிடரால் வீதிகள், பாலங்கள், சுகாதார மையங்கள் மற்றும் பாடசாலைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து, வாழ்வாதார இழப்புகளுடன் நிச்சயமற்ற […]

தமிழகம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதில் சேலம் மேட்டூரைச் சேர்ந்த 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் கே. பத்மராஜன் தனது வேட்புமனுவை முதலாளாகத் தாக்கல் செய்தார். இந்தியா செய்தி தமிழ்நாடு

256வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

  • September 10, 2026
  • 0 Comments

தமிழகம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதில் சேலம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் கே. பத்மராஜன் தனது வேட்புமனுவை முதலாளாகத் தாக்கல் செய்தார். தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான அன்று, 65 வயதான பத்மராஜன் தனக்கு உகந்த நேரமாகக் கருதி காலை 11.05 மணிக்குத் தனது மனுவை […]

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லி பொலிஸார் நகரம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பிரிக்ஸ் மாநாடு: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

  • September 10, 2026
  • 0 Comments

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லி பொலிஸார் நகரம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர். மாநாட்டின் பாதுகாப்பிற்காக 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த 4,800க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸாரும் களமிறக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேசப் பிரதிநிதிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் முக்கியப் பகுதிகள் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்களைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் […]

இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இத்தாலி போர்க் கப்பல்

  • September 10, 2026
  • 0 Comments

இத்தாலியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க் கப்பலான ஐரிஎஸ் ஜூசப்பே கரிபால்டி ‘ITS Giuseppe Garibaldi’, நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. விநியோக தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தில், கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் இத்தாலிய போர்க்கப்பலை வரவேற்றனர். 180 மீற்றர் நீளமான இந்த விமானம் தாங்கிக் கப்பலில் 550 கடற்படை மாலுமிகளும், 150 விமானப்படை பணியாளர்களும், 100 அதிகாரிகளுமாக 830 பேர் பணியாற்றுகின்றனர். இந்த விமானம்தாங்கிக் […]

சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அறிக்கைகளைத் தயாரித்து வழங்கிய குற்றத்திற்காக, சிட்னியைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் செர்கோவிற்கு (Alexander Csergo) மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சீன உளவு அமைப்புக்கு அறிக்கை அளித்த ஆஸ்திரேலிய தொழிலதிபருக்கு சிறை!

  • September 10, 2026
  • 0 Comments

சீன உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அறிக்கைகளைத் தயாரித்து வழங்கிய குற்றத்திற்காக, சிட்னியைச் சேர்ந்த தொழிலதிபர் அலெக்சாண்டர் செர்கோவிற்கு (Alexander Csergo) மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவனக்குறைவான வெளிநாட்டு தலையீட்டுக் குற்றச்சாட்டின் (reckless foreign interference) கீழ் ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும். எனினும், ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த மாதமே அவர் பிணையில் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 […]

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இலங்கை செய்தி

ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு ரத்து

  • September 10, 2026
  • 0 Comments

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டப்படி செல்லுபடியாகாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) ஆகியவை முன்னாள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த,நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற […]

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் ஆராய்வு அரசியல் இலங்கை செய்தி

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் ஆராய்வு

  • September 10, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது இங்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய […]

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட இந்திய பாதுகாப்பு பிரதிநிதிகள் குழு , பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்து பேச்சு நடத்தியது. இந்தியா இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்த டெல்லி, கொழும்பு இணக்கம்

  • September 10, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்ட இந்திய பாதுகாப்பு பிரதிநிதிகள் குழு , பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) சந்தித்து பேச்சு நடத்தியது. இந்திய பிரதிநிதிகள் குழுவில் அந்நாட்டு விமானப்படைத் பிரதித் தளபதி ஏயார் மார்ஷல் Ashutosh Dixit, பிரதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் Ajay Kochhar, பிரதி இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் Sandeep Jain மற்றும் […]

இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

மஹிந்தவுடன் சீனத் தூதுவர் அவசர சந்திப்பு

  • September 10, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இலங்கைக்கான புதிய சீன தூதர் வேய் ஹுவாசியாங்கிற்கும் (Wei Huaxiang) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான நட்புரீதியான சந்திப்பொன்று நேற்று (09) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நியமனக் கடிதத்தைச் சமர்ப்பித்து, இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றுக்கொண்ட வேய் ஹுவாசியாங்கிற்கு மஹிந்த ராஜபக்ச தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.