இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் குறித்து தேரர் பரபரப்பு கருத்து
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உதவி வழங்கி வருவதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சிகள் இருக்கலாம் எனவும், எனவே கச்சத்தீவு மற்றும் வடக்கு மாகாணத்தைப் பாதுகாப்பதற்குப் பொதுமக்கள் அணிதிரள வேண்டும் எனவும் ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: “இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை நாம் வரவேற்கின்றோம். எனினும், நாட்டில் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்காகவே அவர் வந்திருக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அவரது […]













