வடகொரியாவின் மற்றுமொரு அத்துமீறல்: பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு
ரஷ்யா மற்றும் சீனாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வடகொரியப் பணியாளர்களின் வலையமைப்பு மூலம், அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன், தனது அணு ஆயுதத் திட்டத்திற்காகக் கடந்த ஆண்டில் மட்டும் 450 மில்லியன் டாலர் முதல் 800 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளதாக மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன. ஐ.நா. சபையின் தடைகளை வடகொரியா மீறுவதற்கு இது உதவுவதாகவும் மேற்படி நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன. வடகொரியாவின் கட்டாயத் தொழிலாளர் திட்டத்தை மனித உரிமைகள் அமைப்புகள் நீண்டகாலமாகக் […]













