உலகம்

சீனாவை தாக்கிய டால்பின் புயல் – கனமழை மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை

  • August 9, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல புயலான டால்பின் புயல், இன்று மாலை (09) சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடைந்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டுவந்த இந்தப் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறித்த கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவை அடைவதற்கு முன்பு, இந்தப் புயல் ஜப்பானின் தெற்கு ஒகினாவா மாகாணத்தைக் கடந்து சென்றது. அங்கு, ஆறு பேர் காயமடைந்ததாகவும், 50,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

இலங்கை

ஹட்டனில் மண்ணில் புதையுண்ட நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

  • August 3, 2026
  • 0 Comments

ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் மாயமான மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து – பெண் பலி, மூவர் மாயம் ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது; அவசரகாலக் குழுக்கள் […]

உலகம்

சீனாவில் நிலச்சரிவு – ஏராளமானோர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக தகவல்

  • July 17, 2026
  • 0 Comments

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் (Chongqing) உள்ள மாவட்டமொன்றில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. நிலச்சரிவை தொடர்ந்து 60 இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் இதுவரை ஒன்பது பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் இரண்டாம் நிலை அவசரகால நடவடிக்கையைச் செயல்படுத்தி, 100 பேர் கொண்ட மீட்புக் […]

உலகம்

சீனாவில் சீரற்ற வானிலை : நிலச்சரிவால் 21 பேர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, டான்சாங் (Tanchang) கவுண்டியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசுக்குச் சொந்தமான ஒரு வனவியல் பண்ணையில் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள் உட்பட 33 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதாக […]

உலகம்

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நிலச்சரிவு – குழந்தைகள் பலர் பலி

  • July 8, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் இன்று பெய்த கனமழையினால் மதராஸா பாடசாலையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதில் எட்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன்,  ஐந்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் குறித்த பாடசாலையில் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சைக்காக முகாம்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில், மழையால் ஏற்பட்ட தனித்தனி நிலச்சரிவுகளில், முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தக் கோரச் […]

இந்தியா

கேரளாவின் வயநாட்டில் பாரிய நிலச்சரிவு – மூவர் உயிரிழப்பு

  • July 7, 2026
  • 0 Comments

கேரளா வயநாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கேரளா மாநிலம், வயநாடு (Wayanad) மாவட்டத்தின் மேப்பாடி (Meppady) அருகேயுள்ள கல்லாடி பகுதியில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட இரட்டைச் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், கட்டுமானப் பணியின்போது வெட்டப்பட்ட மண்மேடு சரிந்து விழுந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன்,  6 பேர் உள்ளூர் மக்களால் காயங்களுடன் […]

உலகம்

சீனாவில் நிலச்சரிவு – 17 பேர் மண்ணுள் புதையுண்டுள்ளனர்

  • July 7, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு மாகாணமான கான்சுவில் (Gansu) இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 33 பேர் மண்ணுள் புதையுண்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் 17 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 16 பேரை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் குறுக்கிடும் ஆறுகளைக் கொண்ட இந்த மலைப் பிரதேசம், குறிப்பாக மழைக்காலங்களில், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இலக்காகுகின்றமை குறிப்பிடத்தக்கது. […]

உலகம்

வங்கதேசத்தில் நிலச்சரிவு – குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழப்பு

  • July 6, 2026
  • 0 Comments

தென்கிழக்கு வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்த நிலைமை இன்று அதிகாலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர் மழையானது மேலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும், ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னும் நிலையற்ற சரிவுகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 12 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியர்கள், உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றமான காக்ஸ் பஜாரில் […]