வங்கதேசத்தில் நிலச்சரிவு – குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழப்பு
தென்கிழக்கு வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குறைந்தது 08 ரோஹிங்யா அகதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்த நிலைமை இன்று அதிகாலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழையானது மேலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும், ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னும் நிலையற்ற சரிவுகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 12 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியர்கள், உலகின் மிகப்பெரிய அகதிகள் குடியேற்றமான காக்ஸ் பஜாரில் உள்ள நெரிசல் மிகுந்த முகாம்களில் வசித்து வருகின்றனர்.
பெரும்பாலான குடும்பங்கள், ஆண்டுதோறும் வரும் பருவமழைக் காலத்தில் நிலச்சரிவுகளுக்கு மிகவும் எளிதில் இலக்காகுவதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.




