FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) தீர்மானித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள் விளையாட்டு

FIFA போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பா முடிவு

  • July 30, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு கைவிடப்படாவிட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) தீர்மானித்துள்ளது. FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின் (Gianni Infantino) உலகக் கோப்பைப் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்திற்கு UEFA வின் உறுப்பு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அதற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தனியார் முதலீட்டாளர்களின் 20 சதவீத பங்களிப்புடன், 20 பில்லியன் டொலர் வணிக நடவடிக்கையாக உலகக் […]

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆக்சன் அமைப்பு தடை: மேல்முறையீடு செய்ய பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அனுமதி

  • July 30, 2026
  • 0 Comments

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேரடிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி அமைப்பின் இணை நிறுவனரான ஹுதா அம்மோரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த பெப்ரவரி மாதம், இந்தத் தடை […]

உலகம் செய்தி

ஈரானுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை? சீனா மறுப்பு

  • July 30, 2026
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகள் (Air-defence missile launchers) சில வாரங்களுக்குள் ஈரானுக்கு கிடைக்கவுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை சீனா முற்றாக மறுத்துள்ளது. சீனாவிலிருந்து ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறவுள்ளதாகப் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி Reuters செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையின்படி, முதற்கட்ட விநியோகங்கள் மேற்கு சீனாவில் உள்ள உரும்கியிலிருந்து (Urumqi) பாகிஸ்தான் வழியாக ஈரானைச் சென்றடையும் […]

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் செய்தி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட நால்வர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதுடன், பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா சுகாதார அமைச்சு வியாழக்கிழமையன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதி முழுவதிலும் […]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு - ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு - திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் வழக்கு ஒத்திவைப்பு

  • July 30, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு – திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பாக வழக்காளி மற்றும் ஏனைய எதிராளிகளின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் […]

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைகோரி அறவழிப் போராட்டம்

  • July 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதா ததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் […]

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். செய்தி விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமனம்

  • July 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், கடந்த 2022-ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய ஜோ ரூட், மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது நீண்டகாலப் பயணத்தை இந்த மாதத் தொடக்கத்தில் முடித்துக் கொண்ட ஸ்டீபன் பிளெமிங், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) செப்டம்பர் 2030 வரை நீடிக்கும் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் கேப்டனான பிளெமிங், […]

தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார். உலகம் செய்தி

“உலக அமைதிக்கு ஈரான் ஆபத்து என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்”

  • July 30, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான உலகளாவிய வர்த்தகம் தொடர்பான ஈரானின் நடவடிக்கைகளைக் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் இன்றைய உலகில் ஈரான் உலக அமைதிக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக விளங்குகிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிசக்திப் பாதைகள் வேறு வழிகளுக்கு மாற்றப்பட்டால், அந்த நீர்வழிப்பாதை தனது மூலோபாய ஆற்றலை (strategic power) இழந்துவிடும் என நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார். “ஹார்முஸ் நீரிணை […]

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரானை மீண்டும் அமைதிப் பாதைக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தீவிர முயற்சி

  • July 30, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் மற்றும் அமெரிக்காவை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குள் அனைத்துப் தரப்பினரையும் மீண்டும் கொண்டுவர நாங்கள் எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி (Tahir Andrabi) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் “தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான தங்களது கடமைகளை இரு நாடுகளும் முழுமையாகப் […]

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று  Cab ரக வாகனம், மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை செய்தி

வவுனியாவில் கோர விபத்து: இருவர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று  Cab ரக வாகனம், மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மரக்கறி ஏற்றிச்சென்ற   வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். உடற்கூறாய்வுப் […]