வவுனியாவில் கோர விபத்து: இருவர் பலி
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று Cab ரக வாகனம், மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மரக்கறி ஏற்றிச்சென்ற வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக சடலங்கள் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




