உலகம் செய்தி

“உலக அமைதிக்கு ஈரான் ஆபத்து என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்”

தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான உலகளாவிய வர்த்தகம் தொடர்பான ஈரானின் நடவடிக்கைகளைக் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய உலகில் ஈரான் உலக அமைதிக்கு எவ்வளவு பெரிய ஆபத்தாக விளங்குகிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்திப் பாதைகள் வேறு வழிகளுக்கு மாற்றப்பட்டால், அந்த நீர்வழிப்பாதை தனது மூலோபாய ஆற்றலை (strategic power) இழந்துவிடும் என நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஹார்முஸ் நீரிணை அவ்வளவு பெரிய அழுத்தத்தை அல்லது பலத்தைக் கொடுக்கும் காரணியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஏனெனில் மக்கள் எரிசக்திக் குழாய்களை இந்த நீரிணையிலிருந்து செங்கடலுக்கும், அங்கிருந்து மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்ரேலுக்கும் மாற்றுவார்கள். இந்தத் தடங்கலை எங்களால் நீக்க முடியும், நாங்கள் அதைச் செய்வோம்” என நெதன்யாகு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி