இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, இன்று முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய பாதுகாப்பு அமைச்சரும் அவரது குழுவினரும் பயன்படுத்தும் பாதைகளில் அவ்வப்போது போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரமுகரின் நடமாட்டம் மற்றும் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைப் பொறுத்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இந்தியப் பாதுகாப்பு ராஜ்நாத் சிங் இன்று இலங்கை வந்து, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா விடுதிக்குப் பயணிக்க உள்ளார்.

கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக வளாகம் மற்றும் என்.எஸ்.ஏ. வட்டச்சந்தி ஆகியவற்றின் ஊடாக அவரது பயணம் இடம்பெறும்.

இன்று இரவு 8.00 மணிக்கும் 9.00 மணிக்கும் இடையில், அவர் காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டம் மற்றும் சுதந்திர சதுக்க சுற்றுவட்டம், வழியாக இந்திய இல்லத்துக்கு பயணித்து, பின்னர் ஜே.ஓ.சி. சந்தி மற்றும் பிளவர் வீதி வழியாகத் திரும்ப உள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நாளை காலை 9.50 மணி முதல் 11.25 மணிக்குள் ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்ல உள்ளார்.

பிற்பகல் 2.00 மணி முதல், பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதிப்படையினர் நினைவிடம், பாதுகாப்பு அமைச்சு, நாடாளுமன்ற வளாகம் மற்றும் கங்காராமய விகாரை ஆகிய இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்வார்.

செப்டம்பர் 10 ஆம் திகதி ராஜ்நாத் சிங் நுவரெலியாவிற்குப் பயணம் செய்யவுள்ளார். சீதையம்மன் ஆலயத்தில் அவர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

இந்த மூன்று நாள் பயணத்தின் போது, ​​வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்தத் தற்காலிகப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறு காவல்துறை அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை