ஐரோப்பா

கிரீன்லாந்துக்கு 200 மில்லியன் யூரோ ஆதரவு – ஐரோப்பிய ஆணையம் அறிவிப்பு

காலநிலை மாற்றம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கிரீன்லாந்திற்கு 200 மில்லியன் யூரோ ஆதரவை வழங்குவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி குறித்த பகுதியை ஆக்கிரமிக்க அல்லது அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகின்ற நிலையில் இந்த நிதித் தொகுப்பை அறிவித்துள்ளார்.

அத்துடன் கிரீன்லாந்தின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும், அதன் எதிர்காலத்தை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் வான் டெர் லேயன் வலியுறுத்தினார்.

இதற்கிடையே நீடித்த பதற்றங்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தளராத ஆதரவை கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சனும் Jens-Frederik Nielsen , டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனும் Mette Frederiksen பாராட்டினர்.

இதேவேளை அமெரிக்காவின் பங்களிப்பு இல்லாமல், 11 நேட்டோ நாடுகளைச் சேர்ந்த 400 வீரர்கள் கிரீன்லாந்தில் இராணுவப் பயிற்சிகளை தொடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்