வெனிசுலாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான அவகாசம் உள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெனிசுலாவில் 2027 ஜூலைக்குள் ஜனாதிபதி தேர்தல்

  • October 9, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு போதுமான அவகாசம் உள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மசாடோ (Maria Corina Machado) தெரிவித்துள்ளார். வாஷிங்டனின் மேற்பார்வையில் நடைபெறும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் மரியா கொரினா மசாடோ வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மசாடோ இது குறித்துப் பேசுகையில், “வெனிசுலாவை ஒரு நிலையான ஜனநாயக நாடாக […]

குற்ற கும்பலை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தேடுதல் வேட்டை ஆஸ்திரேலியா உலகம் செய்தி

குற்றக் கும்பலை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தேடுதல் வேட்டை

  • October 9, 2026
  • 0 Comments

பொதுமக்களின் பாதுகாப்பை விடப் பணத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படும் Lone Wolf என்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பலின் குற்றச் செயல்களை முடக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகளால் ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் சதித்திட்டக் குற்றக் கும்பல்களில், இந்த Lone Wolf மோட்டார் சைக்கிள் கும்பல் மிகவும் ஆபத்தானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் வன்முறைச் சம்பவங்களில் இக்கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமையன்று […]

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் துறவற ஆடை விவகாரத்தில் அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது. - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை செய்தி

“ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றம் அரசமைப்பைமீறும் செயல்”

  • October 9, 2026
  • 0 Comments

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் துறவற ஆடை விவகாரத்தில் அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது. – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள அவர், நாடு திரும்பிய கையோடு இவ்விவகாரம் தொடர்பில் சட்டப்பூர்வமான காரணங்கள் சகிதம் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளார். இந்நிலையில் ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றப்பட்டு, கைதிக்குரிய ஆடை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் […]

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மத்திய சிறையில் சிறை அதிகாரியாகப் பணியாற்றிய திவ்யா சௌத்ரி (Divya Chaudhary) என்பவர், இரண்டு பெண் கைதிகளை விதிகளை மீறித் தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டைச் சுத்தம் செய்ய வைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா செய்தி

கொலை வழக்கு கைதிகளை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற சிறை அதிகாரி கைது

  • October 9, 2026
  • 0 Comments

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மத்திய சிறையில் சிறை அதிகாரியாகப் பணியாற்றிய திவ்யா சௌத்ரி (Divya Chaudhary) என்பவர், இரண்டு பெண் கைதிகளை விதிகளை மீறித் தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டைச் சுத்தம் செய்ய வைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த திவ்யா சௌத்ரியைக் கோட்டா (Kota) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த ஜூலை 12-ஆம் திகதி, அஜ்மீர் மத்திய […]

நடனக் குழுவின் ஒரு பகுதியாக ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திற்குப் பயணம் செய்த அசாமைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் நடனக் கலைஞர், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அசாம் யுவதியின் மரணம்

  • October 9, 2026
  • 0 Comments

நடனக் குழுவின் ஒரு பகுதியாக ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்திற்குப் பயணம் செய்த அசாமைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் நடனக் கலைஞர், ரயில்வே தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ (Himashree Boro) என்ற அந்தப் பெண், விவேக் எக்ஸ்பிரஸ் (Vivek Express) ரயிலில் மீண்டும் அஸ்ஸாம் திரும்பிக் கொண்டிருந்தபோது மாயமானார். பின்னர், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் […]

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மக்களவைத் தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளன. இந்தியா செய்தி

மாநில அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா இடைத்தேர்தல்?

  • October 9, 2026
  • 0 Comments

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மக்களவைத் தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் தவெக (TVK) ஆட்சியின் செல்வாக்கிற்கான சோதனையாகக் கருதப்படும் தமிழகத் தொகுதிகள், பாஜகவின் வளர்ச்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் பிளவு காரணமாக மாறியுள்ள மேற்கு வங்க அரசியல் சூழலில் நந்திகிராம் தொகுதி, மற்றும் அசாமில் […]

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தியா செய்தி

தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்தக் கூடாது: 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள் வலியுறுத்து

  • October 9, 2026
  • 0 Comments

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். “தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பிற அரசியலமைப்பு அமைப்புகளை பலவீனமாக்குவது கண்டிக்கத்தக்கது. மேலும் அவற்றின் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் பிரச்சாரம் தீவிர கவலையளிப்பதாக உள்ளது. அரசியலமைப்பு அமைப்புகளைத் தொடர்ந்து திருடர்கள், சமரசம் செய்யப்பட்டவர்கள் என்று முத்திரை குத்துவது, ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களின் […]

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு (Andy Burnham) பலம் சேர்க்கும் வகையில், முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) ராஜினாமா செய்த நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தொழிற்கட்சி (Labour Party) இடதுசாரி பசுமைக் கட்சியின் (Green Party) சவாலை முறியடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

UK பிரதமரின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த முதல் வெற்றி

  • October 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு (Andy Burnham) பலம் சேர்க்கும் வகையில், முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) ராஜினாமா செய்த நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தொழிற்கட்சி (Labour Party) இடதுசாரி பசுமைக் கட்சியின் (Green Party) சவாலை முறியடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. மத்திய லண்டனில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் (Holborn and St Pancras) தொகுதியில் போட்டியிட்ட உள்ளாட்சிமன்றத் தலைவரும் தொழிற்கட்சி வேட்பாளருமான சகல் அப்தி-வாலி (Sagal Abdi-Wali) 12,292 […]

“ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறையில் அடைத்து, பிரபாகரனால்கூட செய்ய முடியாமல்போனதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது. அரசியல் இலங்கை செய்தி

ஷிரந்தி சிறையில் அடைப்பு: தமிழ் டயஸ்போராக்கள் மகிழ்ச்சி

  • October 9, 2026
  • 0 Comments

“ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறையில் அடைத்து, பிரபாகரனால்கூட செய்ய முடியாமல்போனதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது. இது அரசியல் என்பது தெரியும். அதனால் நான் மகிழ்ச்சி அடையவில்லை. தமிழ் டயஸ்போராக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.”- என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, “ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் டயஸ் போராக்கள் […]

தமிழ்த் தேசிய, சிவில் சமூக செயற்பாட்டாளரான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காலமானார். இலங்கை செய்தி

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்

  • October 9, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசிய, சிவில் சமூக செயற்பாட்டாளரான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காலமானார். சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தின் தலைவரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம், எட்டு மணிநேரம் நடந்த இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மரணமாகியுள்ளார். சி.அ.யோதிலிங்கம் தமிழ்த் தேசிய அரசியலை வழிப்படுத்தும் ஆய்வுகள், கட்டுரைகளை எழுதியிருப்பதுடன், அரசியல் போராட்டங்கள் பலவற்றில் முன்னின்று செயற்பட்டவர். தமிழ் மக்களின் அரசியல் விடுதலை, மலையக மக்களின் உரிமைகள், அரசியலமைப்பு சார்ந்த பெருமளவு நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். சமூக […]