வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு: பிரதமரிடம் மகஜர் கையளிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் குரல் அமைப்பினரால் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமரை, நிகழ்வு நிறைவடைந்த பின்னர் வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர். […]













