உலகம் செய்தி

நவி பிள்ளைக்கு நோபல் பரிசு: இஸ்ரேல் கடும் கண்டனம்

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பொய்கள், வெறுப்புணர்வு மற்றும் அவதூறுகளுக்காக ஒரு விருது இருக்குமேயானால், அதில் முதலிடம் பெறத் தகுதியானவர் நவி பிள்ளைதான்.

அரசியல் நோக்கத்தோடு இஸ்ரேல் மீது இடைவிடாது அவதூறுகளைப் பரப்புவதிலும், ‘இனப்படுகொலை’ என்ற பொய்யை முன்நகர்த்துவதிலும் அவரது பங்கு எத்தகையது என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது இனப்படுகொலைக் குற்றம் சுமத்திய ஐ.நா. விசாரணைக் குழுவின் தலைவராக நவி பிள்ளை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த அறிக்கையில், “21-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பொய்க்கு நோபல் குழு தற்போது பரிசளித்துள்ளதன் மூலம், நரகத்திலிருந்து ஜோசப் கோயபல்ஸ் (நாஜி பிரச்சாரகர்) நிச்சயம் கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பார்” என்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் காரசாரமாகத் தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி