வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில், தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) பதவி நீக்கம் செய்யக் கோரி கேரள சட்டமன்றத்தில் திங்கள்கிழமை   தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

  • October 12, 2026
  • 0 Comments

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில், தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) பதவி நீக்கம் செய்யக் கோரி கேரள சட்டமன்றத்தில் திங்கள்கிழமை   தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் திருத்தங்களுடன்  நிறைவேற்றப்பட்டதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூன்று உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில அரசு தீவிரக் கவலை தெரிவித்துள்ளதைத் […]

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

தொடரும் விசாரணை வேட்டை: சாமர சம்பத் எம்.பி. கைது

  • October 12, 2026
  • 0 Comments

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையான அவரிடம் 3 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே கைது இடம்பெற்றுள்ளது. முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட 03 நிறுவனங்களுக்கு பாஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, லஞ்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணைகளின் அடிப்படையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் அருகே உள்ள முகாம் செர்ஹார் காட்டில் ஒரு இயற்கையான மலைக் குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. இந்தியா செய்தி

ஜம்மு – காஷ்மீர் குகையில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பறிமுதல்

  • October 12, 2026
  • 0 Comments

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் அருகே உள்ள முகாம் செர்ஹார் காட்டில் ஒரு இயற்கையான மலைக் குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், போமை பகுதியில் உள்ள முகாம் செர்ஹார் வனப்பகுதியில் காவல் துறை தேடுதல் நடத்தியது. அங்கிருந்த இயற்கைக் குகையில், ஒரு பெரிய பாறைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நீல நிற பிளாஸ்டிக் பீப்பாயும் ஒரு பையும் கிடைத்தன. அவற்றைப் பாதுகாப்பாகக் […]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போலவே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையும் ஒடுக்குமுறைக்காகப் பயன்படுத்த முடியும். எனவே, இது முன்பிருந்த சட்டத்தை விடச் சிறந்தது எனக் கூற முடியாது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

NPP அரசின் புதிய சட்டமூலத்துக்கு வாசுதேவ நாணயக்கார எதிர்ப்பு

  • October 12, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போலவே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையும் ஒடுக்குமுறைக்காகப் பயன்படுத்த முடியும். எனவே, இது முன்பிருந்த சட்டத்தை விடச் சிறந்தது எனக் கூற முடியாது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கில், அதற்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான் மேற்படி சட்டமூலத்திலும் புலப்படுகின்றது. ஏதேனும் […]

தைவானுடன் தூதரக உறவுகளைப் பேணி வருவதைக் காரணம் காட்டி, பராகுவேயின் தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் பெலிஸ் (Belize) வெளியுறவு அமைச்சர் மீது சீனா திங்கள்கிழமை அன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உலகம் செய்தி

தைவானுடன் உறவு: முக்கிய இரு நாடுகளுக்கு சீனா தடை

  • October 12, 2026
  • 0 Comments

தைவானுடன் தூதரக உறவுகளைப் பேணி வருவதைக் காரணம் காட்டி, பராகுவேயின் தகவல் தொடர்பு அமைச்சர் மற்றும் பெலிஸ் (Belize) வெளியுறவு அமைச்சர் மீது சீனா திங்கள்கிழமை அன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. தைவானுடன் முறையான தூதரக உறவுகளைத் தொடரும் உலகின் வெறும் 12 நாடுகளில் பராகுவேயும் பெலிஸும் அடங்கும். தைவான் என்பது அதன் மாகாணங்களில் ஒன்று என்றும், அதற்கு ஒரு நாட்டின் தகுதிகள் இருக்க முடியாது என்றும் சீனா வாதிடுகிறது. இந்த நிலைப்பாட்டைத் தைபே அரசாங்கம் கடுமையாக […]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

மஹிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

  • October 12, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருலப்பனையிலுள்ள இல்லத்தில் இருந்தபோது அவருக்கு இருதய நோய் தீவிரமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU ) அனுமதிக்கப்பட்டு, நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை […]

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு கோரியும், அவருக்குச் சிறைக்கைதிக்கான ஆடை அணிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் நடைபயணம் இன்று(12) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கோரி 3ஆவது நாளாக தொடரும் நடைபவனி

  • October 12, 2026
  • 0 Comments

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு கோரியும், அவருக்குச் சிறைக்கைதிக்கான ஆடை அணிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் நடைபயணம் இன்று(12) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. ‘சுதந்திரத்திற்கான யாத்திரை’ எனும் பெயரிலான இந்த நடைபயணம் நேற்று முன்தினம் கண்டியில் ஆரம்பமாகி, கடுகன்னாவை வரை வந்தடைந்தது. இதில் ஏராளமான பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, 2ஆவது நாளான நேற்று கடுகன்னாவையிலிருந்து கேகாலை வரை நடைபவனி இடம்பெற்றது. இதன்போது சில […]

ஆஸ்திரேலியப் பொறியியலாளரான ராபர்ட் பெத்தர் (Robert Pether) கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

4 ஆண்டுகள் சிறை, பயணக் கட்டுப்பாடு நிறைவு: ஈராக்கிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய பொறியியலாளர்

  • October 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பொறியியலாளரான ராபர்ட் பெத்தர் (Robert Pether) கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் உறுதிப்படுத்தியுள்ளார். 51 வயதான பெத்தர் மற்றும் அவரது எகிப்திய சக ஊழியர் ஆகியோர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ஆரம்பத்திலிருந்தே பெத்தர் தான் நிரபராதி என்றே கூறிவந்தார். நான்கு ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசத்திற்குப் பிறகு, 2025 ஜூன் மாதம் அவர் […]

“இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் தரை மற்றும் வான் பரப்பைப் பயன்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தியா இலங்கை செய்தி

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இலங்கை ஒருபோதும் மாறாது

  • October 12, 2026
  • 0 Comments

“இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையின் தரை மற்றும் வான் பரப்பைப் பயன்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். கச்சத்தீவை மீட்போம் எனத் தமிழகத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கே உள்ளது என உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் இந்திய மத்திய அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. சண்டை பிடித்துக்கொண்டு அல்ல, சிறப்பான உறவு மூலமே இந்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் […]

இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் எலியுட் கிப்சோஜ், Eliud Kipchoge ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் கடந்த 3 ஆண்டுகளில் தனது முதல் மாரத்தான் வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். செய்தி விளையாட்டு

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார் ஒலிம்பிக் நாயகன் கிப்சோஜ்

  • October 11, 2026
  • 0 Comments

இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் எலியுட் கிப்சோஜ், Eliud Kipchoge ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் கடந்த 3 ஆண்டுகளில் தனது முதல் மாரத்தான் வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். வரலாற்றின் மிகச்சிறந்த மாரத்தான் வீரரான 41 வயதான கிப்சோஜ், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 2 மணி நேரம், 9 நிமிடங்கள், 10 விநாடிகளில் இலக்கை எட்டினார். இது இப்போட்டியின் முந்தைய சாதனையை […]