இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கோரி 3ஆவது நாளாக தொடரும் நடைபவனி

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு கோரியும், அவருக்குச் சிறைக்கைதிக்கான ஆடை அணிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் நடைபயணம் இன்று(12) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு கோரியும், அவருக்குச் சிறைக்கைதிக்கான ஆடை அணிவிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மகா சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் நடைபயணம் இன்று(12) 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

‘சுதந்திரத்திற்கான யாத்திரை’ எனும் பெயரிலான இந்த நடைபயணம் நேற்று முன்தினம் கண்டியில் ஆரம்பமாகி, கடுகன்னாவை வரை வந்தடைந்தது. இதில் ஏராளமான பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, 2ஆவது நாளான நேற்று கடுகன்னாவையிலிருந்து கேகாலை வரை நடைபவனி இடம்பெற்றது. இதன்போது சில இடங்களில் பொதுமக்கள் திரண்டு வரவேற்பளித்ததுடன், பிக்குகளுக்குத் தானமும் வழங்கினர்.

3ஆவது நாளான இன்று (12) கேகாலையிலிருந்து வரக்காப்பொலை வரை இந்நடைபயணம் செல்லவுள்ளதுடன், வரும் 15 ஆம் திகதி கொழும்பைச் சென்றடைவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரி கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று பானதுறையில் இடம்பெற்றது.பின்னர் கொழும்பு கோட்டையிலும் கையெழுத்து திரட்டப்பட்டது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை