இந்தியா செய்தி

ஜம்மு – காஷ்மீர் குகையில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் அருகே உள்ள முகாம் செர்ஹார் காட்டில் ஒரு இயற்கையான மலைக் குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் அருகே உள்ள முகாம் செர்ஹார் காட்டில் ஒரு இயற்கையான மலைக் குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், போமை பகுதியில் உள்ள முகாம் செர்ஹார் வனப்பகுதியில் காவல் துறை தேடுதல் நடத்தியது.
அங்கிருந்த இயற்கைக் குகையில், ஒரு பெரிய பாறைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நீல நிற பிளாஸ்டிக் பீப்பாயும் ஒரு பையும் கிடைத்தன. அவற்றைப் பாதுகாப்பாகக் கையாள வெடிகுண்டு செயலிழப்புப் படை வரவழைக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட வற்றில் ஒரு மல்டி கிரனேட் லாஞ்சர், இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப் பாக்கிகள், 11 கையெறி குண்டுகள், ரிமோட் மூலம் இயக்கக் கூடிய இரண்டு ஐ.இ.டி. வெடிகுண்டுகள் அடங்கும்.

எட்டு டெட்டனேட்டர்கள், இரண்டு டைமர்கள், ஒய்-எஸ்எம்எஸ் கருவி, பிரைமா கார்டுகள், மின்கம்பிகள், பேட்டரி செல்கள் போன்ற வெடிகுண்டு தயாரிக்கவோ வெடிக்கச் செய்யவோ பயன்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்களும் வெடிபொருட்களும் எங்கிருந்து வந்தன, எதற்காக பதுக்கி வைக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இவை ஏதேனும் திட்டமிடப்பட்ட தீவிரவாதச் செயலுடன் தொடர்புடையவையா என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி