அரசியல் இலங்கை செய்தி

NPP அரசின் புதிய சட்டமூலத்துக்கு வாசுதேவ நாணயக்கார எதிர்ப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போலவே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையும் ஒடுக்குமுறைக்காகப் பயன்படுத்த முடியும். எனவே, இது முன்பிருந்த சட்டத்தை விடச் சிறந்தது எனக் கூற முடியாது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போலவே, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தையும் ஒடுக்குமுறைக்காகப் பயன்படுத்த முடியும். எனவே, இது முன்பிருந்த சட்டத்தை விடச் சிறந்தது எனக் கூற முடியாது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நோக்கில், அதற்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான் மேற்படி சட்டமூலத்திலும் புலப்படுகின்றது. ஏதேனும் ஒரு நடவடிக்கை அச்சுறுத்தல் எனக் கருதப்பட்டால், அதனை ஒடுக்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தி, நீதிமன்றம் ஊடாகவே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுதல், தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்படி சட்டமூலத்துக்குள் உள்ளடங்காது போன்ற சில நல்ல விடயங்களும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் உள்ளன.

எனினும், பயங்கரவாதம் என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை.

இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இருந்த சட்டத்தை விட இது நல்லது என்ற முடிவுக்கு வர முடியாது. இதனையும் ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்த முடியும்” என்றார் வாசுதேவ நாணயக்கார.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை