உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் புதிய ராணுவத் தளபதி பலி!

  • May 27, 2026
  • 0 Comments

காசாவிலுள்ள குடியிருப்பொன்றின்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவப் பிரிவுத் தளபதியான Mohammed Odeh கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை, பல மாத கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில், Odehவுடன் சேர்த்து மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர் . மேலும் பலர் காயமடைந்தனர். […]

இலங்கை செய்தி

யாழில் காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு?

  • May 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள். காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஏனைய […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!

  • May 27, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் இப்போட்டி ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கடைசி அணியாக play-off சுற்றில் கால்பதித்து இருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து 3-வது இடம் […]

உலகம் செய்தி

புடினின் அடுத்த கட்டப் போர் வியூகம்!

  • May 27, 2026
  • 0 Comments

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளை ஈடுகட்ட, ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போர்க்களத்தில் குறைந்து வரும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதியதாக இராணுவத்தில் சேருபவர்களுக்குப் பெரும் தொகையிலான கடன் தள்ளுபடி மற்றும் நிதிச் சலுகைகளை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதனுடன், மோல்டோவாவிலிருந்து பிரிந்த டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் வசிப்பவர்கள் எளிதாக ரஷ்யக் குடியுரிமை பெறுவதற்கான புதிய சட்டதிட்டங்களையும் Vladimir Putin நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்த வியூகங்கள் அனைத்தும் ரஷ்யாவின் பொருளாதார மந்தநிலைக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு: விரைவில் அதிரடி சட்டம்!

  • May 27, 2026
  • 0 Comments

“மக்கள் ஆணைக்கு எதிராக செயல்படமாட்டோம். எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் எந்தவொரு திட்டமும் இல்லை.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “புதியதொரு அரசியல் கலாசாரத்துக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். சிலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை அரசியலில் பரபரப்பு: புதிய கட்சி ஆரம்பித்தார் பொன்சேகா!

  • May 27, 2026
  • 0 Comments

புதியதொரு கட்சியை உருவாக்கி இருப்பதாகவும், வருட இறுதி முதல் அக்கட்சி ஊடான நடவடிக்கை இடம்பெறும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “எமது கட்சியில் எவ்வாறானவர்களை இணைக்க வேண்டும் என நாம் வகுத்த நிர்ணயங்களுக்கமைய 75 சதவீத பணி நிறைவு பெற்றிருகின்றது. நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய நபர்கள் பற்றிய தேடுதல் தற்போது இடம்பெறுகின்றது. ஆரம்பத்தில் நானே கட்சிக்கு தலைமை வகிப்பேன். அதன்பின்னர் […]

செய்தி விளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது RCB!

  • May 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் Qualifier 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தர்மசாலாவில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி , முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் காகிசோ ரபாடா […]

இந்தியா செய்தி

இந்தோ – பசுபிக் பாதுகாப்புக்காக இந்தியா, ஆஸ்திரேலியா கைகோர்ப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong , பிரதமர் நரேந்திர மோடியை Narendra Modi நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான ‘விரிவான மூலோபாய கூட்டாண்மை’ குறித்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே பிரதமர் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை […]

இலங்கை

ரஷ்யாவின் பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!

  • May 27, 2026
  • 0 Comments

ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் வாசிலி ஒஸ்மாகோவை (Vasily Osmakov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். மொஸ்கோவில் மே 26 முதல் 29 ஆம் நாள் வரை நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான முதலாவது சர்வதேச மன்றம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர் பிரதிநிதிகளின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புச் செயலர் ரஷ்யா சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சருடனான […]

இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் work from home?

  • May 27, 2026
  • 0 Comments

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் ‘work from home ’ சிஸ்டம் பற்றி எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் சேமிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு ‘work from home’ சிஸ்டம் பற்றி அமைச்சரவையில் ஆராயப்பட்டதா என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ […]