மஹிந்த ராஜபக்ச தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருலப்பனையிலுள்ள இல்லத்தில் இருந்தபோது அவருக்கு இருதய நோய் தீவிரமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU ) அனுமதிக்கப்பட்டு, நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.
கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.




