தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (SIR) இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில், தலைமைத் தேர்தல் ஆணையரை (CEC) பதவி நீக்கம் செய்யக் கோரி கேரள சட்டமன்றத்தில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாகவும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூன்று உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் போது ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில அரசு தீவிரக் கவலை தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்துள்ளது.




