இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. செய்தி விளையாட்டு

110 ஓட்டங்களுக்குள் சுருண்டது பாகிஸ்தான்

  • October 27, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி பந்து வீச்சல் அசத்தியது. டில்சான் மதுசங்க ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார். 8.3 ஓவர்கள் பந்துவீசிய […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி

  • October 27, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் இன்று (27) நடைபெறும் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக அமைந்துள்ளது.இன்று காலை முதல் வாக்களிப்பு இடம்பெற்றது. 2023ஆம் ஆண்டு ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள், அதனைத் தொடர்ந்து காசா மற்றும் ஈரானுடனான போர்கள், சர்வதேச அளவில் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை ஆகியவற்றின் பின்னணியில், நெதன்யாகுவின் தலைமைத்துவம் குறித்து மக்கள் தீர்மானிக்கவுள்ளனர். இஸ்ரேலின் மிக நீண்டகாலம் பிரதமராகப் பதவி வகித்த தலைவரான நெதன்யாகு, சுமார் 19 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தில் இருந்துள்ளார். […]

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை லாகூரில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். செய்தி விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

  • October 27, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை லாகூரில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். குழப்பங்களும், சீரற்ற ஆட்டத்திறனும் இரு அணிகளின் அடையாளமாகத் திகழும் நிலையில், இம்முறை இரு அணிகளும் ஒரே நேரத்தில் தமது திறமையை நேர்மறையான திசையில் வெளிப்படுத்தியுள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக எதிர்பார்ப்புகளைத் தகர்த்து இரு அணிகளும் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து, பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கிய முக்கியமான போட்டியாக இது அமைந்துள்ளது. இலங்கை […]

மலையகத்தில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செய்தி

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு: வான் கதவுகள் திறப்பு

  • October 27, 2026
  • 0 Comments

மலையகத்தில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்சபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, விமல சுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று (26) முதல் தொடர்ந்து வான்பாய்ந்து வருகின்றது. தொடர்ந்து பெய்துவரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்தை மிகவும் அண்மித்துள்ளதாகவும் குறித்த […]

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என மூன்று கப்பல்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தன. இந்தியா இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்கள்

  • October 27, 2026
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என மூன்று கப்பல்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தன. இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் தீர், ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் சாரதி ஆகிய கப்பல்களில் மொத்தம் 135 பயிற்சி அதிகாரிகள் பயணம் செய்கின்றனர். கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலத்தில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி […]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில் அரசு எந்தவித தலையீடோ அல்லது செல்வாக்கோ செலுத்தவில்லை என்றும், அது முற்றிலும் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். இலங்கை செய்தி

செம்மணி விசாரணையில் அரசின் தலையீடு இல்லை

  • October 27, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணையில் அரசு எந்தவித தலையீடோ அல்லது செல்வாக்கோ செலுத்தவில்லை என்றும், அது முற்றிலும் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றது என்றும் பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “செம்மணி விவகாரத்தைப் பொறுத்தவரை கடந்த கால எந்தவொரு அரசும் செய்யாத நடவடிக்கைகளைத் […]

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் கவுண்டி Lancashire அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அவர் இதுவரை உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. செய்தி விளையாட்டு

45 வயதை நெருங்கும் ஆண்டர்சனுக்கு அதிர்ச்சி: புதிய ஒப்பந்தம் வழங்காத லங்காஷயர்

  • October 26, 2026
  • 0 Comments

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், லங்காஷயர் கவுண்டி Lancashire அணியிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனினும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அவர் இதுவரை உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை. 2001ஆம் ஆண்டு முதல் லங்காஷயர் அணிக்காக விளையாடிவந்த 44 வயதான ஆண்டர்சனுக்கு, 2027ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்படமாட்டாது என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், “முடிவு இப்படியாக அமைந்திருக்காவிட்டால் நன்றாக […]

தென்கொரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற கண்ணிவெடிச் சம்பவத்தை தென்கொரியா திட்டமிட்டு உருவாக்கியதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கண்ணிவெடி விவகாரம்: தென்கொரியா மீது ஐ.நா.வில் வடகொரியா குற்றச்சாட்டு

  • October 26, 2026
  • 0 Comments

தென்கொரியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற கண்ணிவெடிச் சம்பவத்தை தென்கொரியா திட்டமிட்டு உருவாக்கியதாக வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடகொரிய அரச ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி, இரு கொரியாக்களுக்கும் இடையிலான இராணுவமயமற்ற வலயத்தில் (DMZ) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் தென்கொரிய இராணுவ வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு வடகொரியப் படையினரால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளே காரணம் என தென்கொரியா தெரிவித்திருந்தது. […]

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா–பிரேசில் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா செய்தி

பிரேசிலில் லூலா வெற்றி: மோடி வாழ்த்து – இணைந்து செயல்பட உறுதி

  • October 26, 2026
  • 0 Comments

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா–பிரேசில் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “எனது அன்பு நண்பர் ஜனாதிபதி லூலாவுக்கு அவரது குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றிக்காக இதயம் கனிந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், […]

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ‘ஜன் நீதி பாரத்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தியா செய்தி

IAS பதவியைத் துறந்து அரசியலில் களம் கண்ட திவ்யா மிட்டல்: 403 தொகுதிகளிலும் போட்டி

  • October 26, 2026
  • 0 Comments

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ‘ஜன் நீதி பாரத்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில், மிர்சாபூரில் நேற்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். இதற்குப் பொதுமக்களின் ஆதரவையும் அவர் கோரினார். தற்போதைய அரசியல் அமைப்பில், […]