வெளிநாட்டு மாணவர் தெரிவில் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு: பிரித்தானியா முன்னிலை
வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இலக்காக ஆஸ்திரேலியாவைத் தெரிவு செய்வதற்கான ஆர்வம், கடந்த ஆறு மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. குடியேற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நிலவும் தீவிர விவாதங்களுக்கு மத்தியில், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டுக்கு வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொழிற்கட்சி, கூட்டணி மற்றும் வன் நேஷன் கட்சி ஆகியவை முன்னெடுத்து வருகின்றன. இதன் பின்னணியிலேயே வெளிநாட்டு மாணவர்களின் ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் குடிவரவு அமைச்சர் டோனி புர்க் அறிவித்த நடவடிக்கைகளின்படி, வெளிநாடுகளிலிருந்து உயர்கல்வியைத் […]













