சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. இலங்கை செய்தி

ஏர்பஸ் வழக்கு: நாமலை நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு

  • October 28, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்சஷ இன்று நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் […]

இந்தியா – சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்: சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனப் படையினர் முகாம் இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லையில் மீண்டும் பதற்றம்

  • October 28, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் கடந்த ஆண்டு பெரும்பகுதியில் எச்சரிக்கையுடன் மீளமைக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைய சில நாட்களில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் அந்த முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட பலவீனமானதாக இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல தசாப்தங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பிரதேசம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய முரண்பாட்டுக்குரிய விடயமாக இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு இரு நாடுகளின் படையினருக்கும் இடையில் […]

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக, அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், நேற்று பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார். இலங்கை செய்தி

பிரதமருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

  • October 28, 2026
  • 0 Comments

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடுவதற்காக, அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், நேற்று பிரதமர் ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார். கல்விப் பரிமாற்றங்கள், வர்த்தக வாய்ப்புகள், பேரிடர் தயார்நிலை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தற்போதைய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு புல்பிரைட் ஆணைக்குழுவை வலுப்படுத்துதல், புதிய வர்த்தக வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் […]

வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இலக்காக ஆஸ்திரேலியாவைத் தெரிவு செய்வதற்கான ஆர்வம், கடந்த ஆறு மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வெளிநாட்டு மாணவர் தெரிவில் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு: பிரித்தானியா முன்னிலை

  • October 28, 2026
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்களின் கல்வி இலக்காக ஆஸ்திரேலியாவைத் தெரிவு செய்வதற்கான ஆர்வம், கடந்த ஆறு மாதங்களில் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. குடியேற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நிலவும் தீவிர விவாதங்களுக்கு மத்தியில், வெளிநாட்டு மாணவர்கள் நாட்டுக்கு வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொழிற்கட்சி, கூட்டணி மற்றும் வன் நேஷன் கட்சி ஆகியவை முன்னெடுத்து வருகின்றன. இதன் பின்னணியிலேயே வெளிநாட்டு மாணவர்களின் ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் குடிவரவு அமைச்சர் டோனி புர்க் அறிவித்த நடவடிக்கைகளின்படி, வெளிநாடுகளிலிருந்து உயர்கல்வியைத் […]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வை அவசியமானது என்றும், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

செம்மணிப் புதைகுழி விடயத்தில் சர்வதேச நிபுணத்துவம் அவசியம்

  • October 28, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வை அவசியமானது என்றும், பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி தொடர்பான மூன்றாவது இடைக்கால அறிக்கையை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, அதற்கான சட்ட […]

நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நவம்பர் 3 விவாதம்

  • October 28, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கூடிய நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு அமைய நவம்பர் 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்படவிருக்கும் மீள்திருத்தப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. 50 குற்றச்சாட்டுகளுடன் சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் […]

எயர் பஸ் விமான கொள்முதலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 24 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

நாமலுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளுடன் குற்றப் பத்திரிகை தாக்கல்

  • October 28, 2026
  • 0 Comments

எயர் பஸ் விமான கொள்முதலின் போது 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக, 24 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் அசங்க போதாரகமவிடம் இதனைத் தெரிவித்தது. ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, 59 சாட்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள், சாட்சியங்களின் வாக்குமூலங்களை உள்ளடக்கிய […]

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி அடுத்து என்ன? அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • October 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:- “பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கை கடந்த […]

இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட LTTE உறுப்பினர் – தீவிர விசாரணைகள் முன்னெடுப்பு

  • October 27, 2026
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் மீள கட்டியெழுப்ப முயன்ற குற்றச்சாட்டில் இந்திய பாதுகாப்புப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டார். அங்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, […]

மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரப் பொருளாதாரத்திற்கு அப்பால் கொண்டு சென்று வணிகத் தொழிலாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும், அதற்குத் தேவையான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மீன்பிடித் தொழிலின் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் தொடர்பில் முறையான திட்டமிடல்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை செய்தி

மீன்பிடித் தொழிலை வணிகத் தொழிலாக மாற்றும் திட்டங்களை வகுக்குமாறு பணிப்பு

  • October 27, 2026
  • 0 Comments

மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரப் பொருளாதாரத்திற்கு அப்பால் கொண்டு சென்று வணிகத் தொழிலாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும், அதற்குத் தேவையான புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மீன்பிடித் தொழிலின் முன்னேற்றத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய புதிய திட்டங்கள் தொடர்பில் முறையான திட்டமிடல்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மீன் உற்பத்தியை அதிகரிப்பதுடன், மீனவ சமூகத்தின் வருமான நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்களைத் […]