ஐரோப்பா

மலட்டு தன்மையுடன் ஆண் நுளம்புகளை உருவாக்கும் பிரான்ஸ்

  • June 17, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்து வரும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது மில்லியன் கணக்கான டெங்கு நுளம்புகளை இனப்பெருக்கம் செய்து, அவற்றை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் அனைத்து நுளம்புகளும் மலட்டு தன்மையான ஆண் நுளம்புகளாகும். மான்ட்பெல்லியரில் (Montpellier)  உள்ள ஆலையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1.5 மில்லியன் மலட்டு தன்மை உள்ள ஆண் நுளம்புகள் உருவாக்கப்படுகின்றன. டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் பரப்பக்கூடிய […]

ஐரோப்பா

பிரான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை!!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பிரான்ஸ் அரசாங்கம்  03 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் அந்த வரியை நீக்காவிட்டால் அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஒயின் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க சந்தையில் பிரெஞ்சுப் பொருட்கள் மீது கணிசமான வரிகள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்த வரியை உடனடியாக நீக்குமாறு மக்ரோனை நேரடியாக வலியுறுத்திய ட்ரம்ப்,  இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். “இந்த வரி தொடர்ந்தால், பிரான்சிலிருந்து வரும் அனைத்து ஷாம்பெயின்கள் […]

ஐரோப்பா

செல்வந்த நாடுகளின் தலைவர்களுக்கு எதிராக அணிதிரண்ட மக்கள்!!

  • June 15, 2026
  • 0 Comments

பிரான்ஸில்  G7  உச்சிமாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில், சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் செல்வந்த நாடுகளின் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains)  என்ற சுற்றுலா நகரில் இன்று G7  உச்சிமாநாடு ஆரம்பமாகவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய கிழக்கு போர், உக்ரைன் மற்றும் உலகளாவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள். உலக நாடுகளின் தலைவர்கள் எவியானுக்குச் செல்வதற்கு முன்பு […]

ஐரோப்பா

பெல்ஜியம், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் அதிவேக ரயில் சேவை!

  • June 14, 2026
  • 0 Comments

பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்தை இணைக்கும் ஒரு புதிய அதிவேக ரயில் இணைப்பு அடுத்த வருடத்தில் (2027) சோதனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் இடையேயான ரயில் சேவையை  பேசல் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை   SNCB, SNCF Voyageurs மற்றும் சுவிஸ் ஃபெடரல் ரயில்வேஸ் (SBB) ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்கின்றன. இந்த சோதனை ஓட்டமானது குறுகிய தூர விமானப் பயணங்களுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி […]

ஐரோப்பா

பிரான்ஸில் வாகனம் ஓட்டும்போது இந்த தவறை செய்தால் 35 யூரோ அபராதம்!

  • May 27, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும் பொழுது இசையை ஒலிக்கச் செய்தல் அல்லது மாற்றுதல் உள்ளிட்ட வேறு ஏதேனும் செயற்பாடுகளை செய்யும்பொழுது அபராதம் விதிக்கப்படும். இந்த செயன்முறை வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. அதாவது வாகனம் ஓட்டும் போது சாரதிகள் வேறு எந்த செயற்பாடுகளை செய்தாலும் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை முதல் மூன்று முறை குற்றம் இழைப்பவர்களுக்கு பொருந்தும். மூன்று முறையை […]

ஐரோப்பா

பிரான்சில் கடும் வெப்பம் – எழுவர் உயிரிழப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

பிரான்சில் கடும் வெப்பம் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பா மற்றும் போர்ச்சுகளில்  வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பிரான்சில் உயிரிழந்தவர்களில், கடும் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள நீச்சல் குளங்களில் குதித்த பலரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இங்கிலாந்திலும் இந்த ஆண்டின் மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று (25) பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

G7 நாடுகளின் திடீர் முடிவால் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

  • March 9, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, தமது அவசரக்கால எண்ணெய் இருப்புகளை கூட்டாக வெளியிடுவது குறித்து G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் இன்று (9) ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் G7 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. எவ்வாறாயினும், இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயர் ஒன்றின் விலை 117.65 அமெரிக்க டொலரில் இருந்து […]

இலங்கை

பிரான்சில் இருந்து 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இளைஞர்!

  • October 22, 2025
  • 0 Comments

பிரான்சில் (France) இருந்து சுமார் 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்த நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். 28 வயதுடைய சூரன் என்ற நல்லூரைச் சேர்ந்த  இளைஞர் “பாரிஸ் டு யாழ்ப்பாணம்”(“Paris to Jaffna)  என்ற தலைப்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்த அவர், யாழப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “நான் செப்டம்பர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை!

  • October 9, 2025
  • 0 Comments

பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு எதிர்கட்சிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu)  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் விரைவில் புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயம் மக்ரோனுக்கு உள்ளது. இதற்கிடையே பெரும்பான்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை […]

ஐரோப்பா

பிரான்ஸில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்- பற்றி எரிந்த வேன்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைநகரமான பாரிஸில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர சேவைகள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். அத்துடன் குறித்த வேன் ஒரு பொது நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர் ஒருவர்  இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]