உலகம்

நேபாளத்தில் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க பேருதவியாக அமையும் ட்ரோன்கள்

  • September 9, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு சேர்க்க நேபாள ராணுவம் ட்ரோன்களைப் (ஆளில்லா விமானங்களை) பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நேபாள ராணுவத்தின் ஒப்பந்த ட்ரோன் விமானி சந்தோஷ் புததோகி Santosh Budhathoki, “எங்களின் பெரும்பாலான ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. உணவு, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளை அனுப்ப […]

உலகம்

சவூதி எண்ணெய் ஆலை மீது பறந்த ட்ரோன்கள் – சுட்டு வீழ்த்திய கிரேக்க இராணுவம்

  • August 27, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பகுதியில் பறந்த ட்ரோன் விமானங்களை கிரேக்க இராணுவத்தினரால் இயக்கப்படும் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பதை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் சவூதி வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரேக்க பேட்ரியாட் அமைப்பு மூன்று ஏவுகணைகளை ஏவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, கிரேக்கத்தால் […]

உலகம்

ட்ரோன்களின் பயன்பாடு – எச்சரிக்கும் ஐ.நா சபை

  • August 19, 2026
  • 0 Comments

ஆயுதம் ஏந்திய ட்ரோன்களின் அதிகரித்த பயன்பாட்டால் கடந்த ஆண்டில் சாதனை அளவிலான மனிதாபிமானப் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது. கனடா மற்றும் ஆஸ்திரேலியாவால் நிதியளிக்கப்படும்  உதவிப் பணியாளர் பாதுகாப்புத் தரவுத்தளத்தின்படி, 2025-ஆம் ஆண்டில் சுமார் 907 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 833 ஆக இருந்ததாகவும் அவர்களில், 350 பேர் கொல்லப்பட்ட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் Antonio Guterres, […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கும் ட்ரோன்கள் உருவாக்கம்

  • August 17, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று, ஒலி அலைகளைப் பயன்படுத்தி காற்றிலும் நீரிலும் பயணிக்கக்கூடிய சிறிய ட்ரோன்களை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சிறிய விமானங்களுக்கு (cavities) எனப்படும் சிறப்பு உள்ளீடற்ற அமைப்புகளை வழங்குவதன் மூலம் இந்த வெற்றியை அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் குழிகள் ஒலியை இயக்க ஆற்றலாக (உந்துவிசையாக) மாற்றும் திறன் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறிய விமானங்களின் “குழிகள்” வட்டமாகவோ அல்லது மணி வடிவத்திலோ வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒலி அலைகள் அவற்றின் உள்ளே […]

ஐரோப்பா

வெடிபொருட்களுடன் ஊடுருவும் ஆளில்லா விமானங்கள் – ஜேர்மனி எடுத்த தீர்மானம்

  • August 10, 2026
  • 0 Comments

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையம் ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஜெர்மனி தனது ஆளில்லா விமான எதிர்ப்பு காவல் பிரிவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்தது. இராணுவ உபகரணப் போக்குவரத்திற்கான முக்கிய மையமான லீப்ஜிக்-ஹாலே விமான நிலையத்தில், உக்ரேனிய சரக்கு விமானம் ஒன்றின் அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டது. பின்னர் குறித்த விமானம் செயலிழக்கப்பட்டது. இந்த சம்பவம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த […]

ஐரோப்பா

ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பிரித்தானிய இராணுவத்தினருக்கு அனுமதி!

  • October 21, 2025
  • 0 Comments

இராணுவ தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த பிரித்தானிய இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) நேற்று ஆற்றிய உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் நான்கு விமான தளங்கள் ட்ரோன் பார்வைகளை எதிர்கொண்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதே நேரத்தில் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியில் ட்ரோன்கள் ஊடுறுவியிருந்தன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த சவால்களை அந்நாடுகள் எதிர்நோக்கியிருந்தன. இதனைத் தொடர்ந்தே […]