ட்ரோன்களின் பயன்பாடு – எச்சரிக்கும் ஐ.நா சபை
ஆயுதம் ஏந்திய ட்ரோன்களின் அதிகரித்த பயன்பாட்டால் கடந்த ஆண்டில் சாதனை அளவிலான மனிதாபிமானப் பணியாளர்கள் தாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது.
கனடா மற்றும் ஆஸ்திரேலியாவால் நிதியளிக்கப்படும் உதவிப் பணியாளர் பாதுகாப்புத் தரவுத்தளத்தின்படி, 2025-ஆம் ஆண்டில் சுமார் 907 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டில் 833 ஆக இருந்ததாகவும் அவர்களில், 350 பேர் கொல்லப்பட்ட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் Antonio Guterres, வன்முறையின் அளவு அதிர்ச்சியூட்டுவதாகக் கூறியதுடன், போரின் விதிகளை மதித்து, குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்யுமாறு நாடுகளை வலியுறுத்தினார்.
அதேநேரம் மோதல்களில் மலிவான மற்றும் எளிதில் மாற்றியமைக்கக்கூடிய ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் பெருகியிருப்பது அபாயங்களை அதிகரித்துள்ளது என்று ஐ.நா. உதவித் தலைவர் டாம் பிளெட்சர் Tom Fletcher கூறினார்.




