உலகம்

சவூதி எண்ணெய் ஆலை மீது பறந்த ட்ரோன்கள் – சுட்டு வீழ்த்திய கிரேக்க இராணுவம்

சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பகுதியில் பறந்த ட்ரோன் விமானங்களை கிரேக்க இராணுவத்தினரால் இயக்கப்படும் வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த ட்ரோன்கள் எங்கிருந்து ஏவப்பட்டன என்பதை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் சவூதி வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிரேக்க பேட்ரியாட் அமைப்பு மூன்று ஏவுகணைகளை ஏவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, கிரேக்கத்தால் இயக்கப்படும் இந்த அமைப்பு போரில் பயன்படுத்தப்படுவது இது மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

இது, வளைகுடா எரிசக்தி உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய நட்பு நாடுகளின் விரிவடைந்து வரும் இராணுவப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்