உலகம்

எத்தியோப்பியாவில் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம் மீது ட்ரோன் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

  • October 30, 2026
  • 0 Comments

எத்தியோப்பியாவின் அம்ஹாரா (Amhara) பிராந்தியத்தில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும்  பொதுமக்களுக்கான முகாம் ஒன்றின் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முகாம் ஏன் குறிவைக்கப்பட்டது அல்லது இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இருப்பினும், கடந்த மாதம் வடக்கு டைக்ரே Tigray  பிராந்தியத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் கூட்டணிக்கும் அடிஸ் அபாபாவில் Addis Ababa உள்ள […]

ஐரோப்பா

ரஷ்யாவின் துறைமுக நகரம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

  • August 12, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்கில், உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 06 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பலர் காயமடைந்த நிலையில்,  அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருவதாக மேயர் ஆண்ட்ரி கிராவ்சென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ளார். அதேநேரம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோலில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நகர ஆளுநர் மிகைல் ரஸ்வோஷாயேவ் (Mikhail Razvozhayev) குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் சில வீடுகள் சேதமடைந்தன, […]

ஐரோப்பா

ரஷ்யா மீது உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல் – குறைந்தது 08 பேர் உயிரழப்பு

  • August 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 08 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸுக்குச் சொந்தமான கிடங்கு உள்ளிட்ட இலக்குகளை மையமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நேற்று இரவு மாத்திரம் 635 உக்ரேனிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 13 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இரு […]

ஐரோப்பா

சிறுவர்கள் பயணித்த பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் மீது பழி

  • June 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது  ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெலாரஸைச் சேர்ந்த சிறுவர் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை “பொதுமக்களுக்கு எதிரான […]

ஐரோப்பா

மொஸ்கோ மீது தீவிர ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்த உக்ரைன் – நால்வர் பலி!

  • May 17, 2026
  • 0 Comments

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மொஸ்கோவில் 03 பேரும் நான்காவது நபர்   உக்ரைனை ஒட்டியுள்ள பெல்கோரோட் பிராந்தியத்திலும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் வான்பரப்பில் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.  

ஐரோப்பா

பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா : இருவர் பலி!

  • May 2, 2026
  • 0 Comments

உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனில் பேருந்தொன்றின் மீது ரஷ்யா இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுப் பயன்பாட்டுத் துறை ஊழியர்கள் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ப்ரோகுடின் (Oleksandr Prokudin) குறிப்பிட்டுள்ளார். உடைந்த ஜன்னல்களுடன் பேருந்தையும், அதன் தரையில் இரத்தக் கறைகளுடன் கிடந்த ஒரு உடலையும் காட்டும் படங்களை அவர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளார். இதேவேளை “இத்தகைய தாக்குதல்கள், பொதுமக்களுக்கு […]