ஐரோப்பா

ஸ்வீடனில் பிரதமரை தெரிவு செய்வதில் இழுபறி

ஸ்வீடனில் தேர்தல் முடிவுக்குப் பிந்தைய அரசியல் தேக்கநிலை நீடிக்கும் சூழலில், பிரதமரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், மத்திய-இடதுசாரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் 349 இடங்களில் 176 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற்றன.

இருப்பினும், இந்த நான்கு கட்சிகளும் சமூக ஜனநாயகக் கட்சியின் (Social Democrats) தலைவரான மக்டலெனா ஆண்டர்சனை (Magdalena Andersson) பிரதமராக ஆதரித்தாலும், புதிய அரசாங்கத்தில் யார் இடம்பெற வேண்டும் என்பதில் அவற்றுக்கிடையே உடன்பாடு ஏற்படவில்லை.

நாடாளுமன்றத்தில் ஐந்தாவது பெரிய கட்சியான சென்டர் கட்சியின் தலைவரான  எலிசபெத் தான்ட் ரிங்க்விஸ்ட்டை (Elisabeth Thand Ringqvis) பிரதமராக விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரை பிரதமராக தெரிவு செய்வதற்கு இன்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டில் பிரதமர் ஒருவரை நியமிப்பத்தில் இழுபறி நிலை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்