உக்ரைனுக்கு மேலதிக உதவி: ரஷ்யாவை சீண்டும் ஜெர்மன்
உக்ரைனுக்கு மேலதிக உதவிகளையும், குளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான எரிசக்தி விநியோக உதவிகளையும் வழங்குவதாக ஜெர்மன் ஜனாதிபதி பிரெட்ரிக் மெர்ஸ் Friedrich Merz உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியை பெர்லினில் இன்று (03) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் பகுதியில் ரஷ்யா முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கலாம் என்றும் மெர்ஸ் எச்சரித்துள்ளார்.
“கருங்கடலில் ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல்கள் மேலும் மோதல் தீவிரமடையும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உலகின் ஏழை நாடுகளும், ஏழை மக்களும் பாதிக்கப்படும் வகையில் உலகளாவிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.




