ஐரோப்பாவில் இருந்து பயணித்த 04 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஐரோப்பாவில் இருந்து பயணித்த குறைந்தது நான்கு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
அதேநேரம் போலந்தில் உள்ள ஒரு விமான நிலையம் சிறிது நேரம் மூடப்பட்டது, இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதேபோல் வார்சா நோக்கிச் சென்ற மற்றொரு விமானமான, கோபன்ஹேகனிலிருந்து வந்த SAS விமானம், திட்டமிட்டபடி சோபின் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அங்கு எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், விமான நிலையம் தொடர்ந்து இயங்குவதாகவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பல்கேரிய தலைநகர் சோஃபியாவில், இஸ்ரேலிலிருந்து வந்த ஒரு விமானம், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.




