ஐரோப்பா செய்தி

மாணவர்களுடன் பாலியல் உறவு: தண்டனை அறிவிப்பு நாளில் தலைமறைவான ஆசிரியை கைது

பிரித்தானியாவில் 1980 களின் இறுதியில் ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்ற இரு மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இரசாயனவியல் ஆசிரியை ஒருவர், நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஆஜராகத் தவறியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் 1980 களின் இறுதியில் ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்ற இரு மாணவர்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இரசாயனவியல் ஆசிரியை ஒருவர், நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்படவிருந்த நிலையில் ஆஜராகத் தவறியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

65 வயதான சாலி-ஆன் போவன் (Sally-Anne Bowen) என்பவர், ஏழு பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் இந்த ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்படவிருந்தது.

குற்றம் இடம்பெற்ற காலத்தில் 20 வயதுகளில் இருந்த அவர், சுமார் 14 முதல் 15 வயதுடைய இரு மாணவர்களுடன் தவறான பாலியல் தொடர்புகளைப் பேணியுள்ளார். ஒரு மாணவருடன் சுமார் 30 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன், மற்றொரு மாணவரை முத்தமிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிணையில் இருந்த போவன், வெள்ளிக்கிழமை காலை தண்டனை அறிவிப்புக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

ஹெமல் ஹெம்ப்ஸ்டெட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் ஹாம்ப்ஷயர் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதுடன், பின்னர் உக்ஸ்பிரிட்ஜ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நவம்பர் 23ஆம் திகதி தண்டனை அறிவிப்புக்காக ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

வடக்கு லண்டனின் பின்ச்லி பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்ட் கல்லூரியில் (Christ’s College) இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றியபோது, போவன் 20 வயதின் நடுப்பகுதியில் இருந்ததாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர், பல மாதங்களாக அவருடன் சுமார் 20 முதல் 30 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றதாகவும், அவரைத் தனது காதலியாகக் கருதியதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

அவர் காதலில் விழுந்திருந்தாலும், யாரிடமும் அந்த உறவைப் பற்றி தெரிவிக்கக்கூடாது என போவன் வலியுறுத்தியதால், அதனை இரகசியமாக வைத்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு மாணவர், ஆசிரியையுடன் மதிய உணவு இடைவேளைகளில் உணவகத்தில் நேரத்தைச் செலவிட்டதாகவும், ஏனைய மாணவர்களின் தூண்டுதலால் அவரை முத்தமிட்டதாகவும், அவரைத் தொட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.

சட்டக் காரணங்களால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களின் அடையாளங்களும் வெளியிடப்படவில்லை.

முன்னாள் மாணவர் டோபியாஸ் ஒலிவர், போவன் வகுப்பறையில் மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகியதுடன், பாலியல் விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியதாக சாட்சியமளித்துள்ளார்.

ஒருமுறை அவர் மேசையில் அமர்ந்து தனது கால்களை மெதுவாக விரித்ததாகவும், இதன்போது அவரது உள்ளாடைகள் வெளிப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், இரசாயனவியல் பாடத்தின்போது காமசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் நிலைகள் குறித்தும் அவர் பேசியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

“வகுப்பறையில் இடம்பெற்ற உரையாடல்கள் பெரும்பாலும் இரசாயனவியல் பாடத்தை விட்டு விலகி, பாலியல் விடயங்களை நோக்கிச் சென்றன” என அவர் கூறினார்.

எனினும், போவன் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை முற்றிலும் புனையப்பட்டவை எனத் தெரிவித்தார். மருத்துவப் பிரச்சினை காரணமாக பாலியல் உறவு தனக்கு சிரமத்தையும் வலியையும் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்களுடன் flirt செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் மறுத்த அவர், “நான் மாணவர்களுடன் flirt செய்யவில்லை. நான் நட்பாகவே நடந்துகொண்டேன்” எனத் தெரிவித்தார்.

தனது ஆடை தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “மார்கரெட் தாட்சரைப் போன்று ஆடை அணிய நான் விரும்பவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி