பிரான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை!!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பிரான்ஸ் அரசாங்கம் 03 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் அந்த வரியை நீக்காவிட்டால் அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஒயின் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க சந்தையில் பிரெஞ்சுப் பொருட்கள் மீது கணிசமான வரிகள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்த வரியை உடனடியாக நீக்குமாறு மக்ரோனை நேரடியாக வலியுறுத்திய ட்ரம்ப், இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“இந்த வரி தொடர்ந்தால், பிரான்சிலிருந்து வரும் அனைத்து ஷாம்பெயின்கள் மற்றும் ஒயின்கள் மீது 100 சதவீதம் வரி விதிப்பதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் தனது டிஜிட்டல் சேவைகள் வரியை 2019-ஆம் ஆண்டில் செயல்படுத்தியது.
இதற்கமைய பிரெஞ்சு வருவாய் €25 மில்லியனுக்கும் அதிகமாகவும், உலகளாவிய வருவாய் €750 மில்லியனுக்கும் அதிகமாகவும் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வரி விதிப்பை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





