உலகம்

6,000 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களை ஏற்றுக்கொண்டது அமெரிக்கா!

தென்னாப்பிரிக்காவிலிருந்து கிட்டத்தட்ட 6,000 அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் அனைவரும் வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட ஒரு குறிப்பாணையில், “தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் ஆப்பிரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆண்டொன்றிற்கு 7500 வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களை ஏற்றுக்கொள்ளவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய தற்போதுவரை 6000 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள், வெள்ளையின தென்னாப்பிரிக்கர்கள் இனரீதியான துன்புறுத்தலையும் “இனப்படுகொலையையும்” எதிர்கொள்வதாகக் கூறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இருப்பினும் அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) இந்த கூற்றுக்களை நிராகரித்துள்ளார்.

இந்த சூழ்நிலையிலேயே வெள்ளையின தென்னாப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குள் உள்வாங்கும் நடவடிக்கையை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்