ஈரானுடனான போர் முடிவுக்கு வருகின்றது, ஒப்பந்தமும் எட்டப்படது!! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தனது அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் வெள்ளிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தி நியூயார்க் டைம்ஸ்’க்கு அளித்த பேட்டியில், ஈரான் இறுதி அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால், மீண்டும் தாக்குதல் நடத்துவேன் என்று ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தத்தின்படி, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கட்டணமில்லாப் போக்குவரத்து நடைபெறும் என்று டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மகத்தான ஒப்பந்தம் இப்பிராந்தியத்திற்கு அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல ஜனாதிபதிகள் ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தத் தவறினர், ஆனால் நான் உண்மையாகவே அமைதியை ஏற்படுத்தினேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் தேசிய பாதுகாப்பு பேரவை, ஈரான்-அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவை இறுதி செய்தது.
லெபனான் உட்பட அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் இன்று முதல் உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்கு வரும் என்று ஈரான் தேசிய பாதுகாப்பு பேரவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, ஜூன் 19, வெள்ளிக்கிழமை அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை உடனடியாகவும் முழுமையாகவும் முடிவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





