உலகம்

காட்டுமிராண்டிகளுடன் இராஜதந்திர ஒப்பந்தத்திற்கு வாய்ப்பே இல்லை – நெதன்யாகு

தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

“காட்டுமிராண்டிகளுடன்” ஒரு இராஜதந்திர ஒப்பந்தத்திற்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை பாராட்டிய அவர், இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

ட்ரம்புடன் சமீபத்தில் நடந்த சந்திப்பு குறித்து விவரித்த நெதன்யாகு, இஸ்லாமியக் குடியரசுடன் ராஜதந்திரம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தாங்கள் விவாதித்ததாகக் கூறினார்.

“இருப்பினும், அங்குள்ள அந்தக் குழுவினருடனும், அந்த காட்டுமிராண்டிகளுடனும் ஒரு உடன்பாடு எட்டப்படும் என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது” என்றும் நெதன்யாகு விவரித்தார்.

மேலும் ட்ரம்பின் பொருளாதார அழுத்தப் பிரச்சாரத்திற்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்