24 வருடகால காத்திருப்பு: நிறைவேறியது அமெரிக்காவின் கனவு
உலகக் கோப்பை இறுதி 32 சுற்று ஆட்டத்தில், 10 வீரர்களுடன் விளையாடிய அமெரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் போஸ்னியா-ஹெர்சகோவினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (இறுதி 16) அதிரடியாக முன்னேறியது. இதன் மூலம் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கான 24 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பரபரப்பான மற்றும் அதிவேகமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதிப் பகுதியில், அமெரிக்காவின் போலரின் பலோகன் (Folarin Balogun) முதல் கோலை அடித்தார். […]













