போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் இஸ்ரேல்
போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும்,காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் உள்ள அல்-ரஷித் வீதியில் பயணித்த வாகனம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் (Dis drone) தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி […]













