இலங்கை செய்தி

திருமலையில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயம்

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘டிராக் 6’ (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கந்தளாய் – வான்எல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், மொறவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாய் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் முதலுதவிக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், காயமடைந்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை