இலங்கை செய்தி

சிறைச்சாலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சிறைச்சாலையின் நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை தொடர்பில் நான் ஆழ்ந்த கவலையடைகின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், இதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை