இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியனானது ஆஸ்திரேலிய மகளிர் அணி
மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து நிர்ணயித்த 151ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு, (Beth Mooney) மற்றும் Phoebe Litchfield) இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஜோடி 67 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றியை எளிதாக்கியது.
இறுதியில் எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 12 பந்துகளில் 13 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மகளிர் T20 உலகக் கோப்பை வரலாற்றில் தனது 7-வது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இறுதிப் போட்டி ஒன்றில் வெற்றிகரமாகத் துரத்தப்பட்ட அதிகபட்ச ரன் என்ற சாதனையோடு ஆஸ்திரேலியா இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா, பின்னர் 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள சோஃபி மோலினக்ஸின் (Sophie Molineux) தலைமையில் ஆஸ்திரேலிய அணி வெல்லும் முதல் பெரிய தொடர் இதுவாகும்.




