செய்தி பொழுதுபோக்கு

இசைத் தென்றல் தேவாவின் இறுதிச்சடங்குக்கு அரச மரியாதை

மறைந்த இசையமைப்பாளர் தேனிசைன் தென்றல் தேவாவின் இறுதிச்சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறைந்த இசையமைப்பாளர் தேனிசைன் தென்றல் தேவாவின் இறுதிச்சடங்கு அரச மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் தேவா உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படுகின்றது.

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, சென்னையில் நேற்று காலை மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 76.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியிருக்கும் தேவா, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1990இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதை பெற்ற அவர், 1992 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். அதேபோல 1995 இல் ஆசை திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில திரைப்பட விருதை பெற்றுத்தந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி