இந்தியா செய்தி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் போராட்டத்தை இந்தியப் பொலிஸார் முடக்கியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட பலரை அதிரடியாகக் கைது செய்தனர்.

வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் போராட்டத்தை இந்தியப் பொலிஸார் முடக்கியதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட பலரை அதிரடியாகக் கைது செய்தனர்.

CJP மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், Gen Z இளைஞர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசிற்குச் சாதகமாக உள்ளதாகக் குற்றம் சாட்டும் போராட்டக்காரர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பணிதுறப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

சனிக்கிழமையன்று பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், “வாக்குத் திருடனே பதவியை விட்டு வெளியேறு”, “ஞானேஷ் குமாரே பதவி விலகு” என முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, பொலிஸார் அவர்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

சுயேச்சை எம்பி கபில் சிபல், அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (AISA) தலைவர் நேஹா போரா, அரசியல் ஆர்வலர்கள் பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

முன்னதாக, வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் பேருந்துகளில் ஏற்றிச் சென்று கைது செய்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகப் பல மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நாடு தழுவிய வாக்காளர் சரிபார்ப்புப் பணியால் லட்சக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி