இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

டெல்லியில் போராட்டம்: அரசியல் தலைவர்கள் உட்பட 5000 பேர் கைது

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தடுப்புக் காவலில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தடுப்புக் காவலில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, இடதுசாரி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்த இருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது. மேலும், தடையை மீறி போராடுபவர்களை கைது செய்வதற்காக 4 ஆயிரம் பெண் பொலிஸார் உட்பட 14 ஆயிரம் பொலிஸார் டெல்லி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மம்தா பானர்ஜி உள்ளிட்ட அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லி சவுத் அவென்யூவில் தங்கி இருந்தனர். எனினும், போராட்டத்தில் பங்கேற்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள இடத்தையே போராட்டக் களமாக மாற்றிக் கொண்டனர்.

‘ஜனநாயகத்தைக் காப்போம்; இந்தியாவைக் காப்போம்’ என்ற பதாகையை ஏந்தியவாறு மம்தா பானர்ஜி தனது கட்சியினர் சிலருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதேபோல், ஜந்தர் மந்தருக்குச் செல்ல இருந்த அரவிந்த் கேஜ்ரிவாலை, டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள அவரது வீட்டிலேயே பொலிஸார் தடுத்து நிறுத்தி வெளியே செல்ல அனுமதி மறுத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் ஜந்தர் மந்தரை நோக்கி, பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ், நேஹா போரா உள்ளிட்டோர் பேரணியாகச் சென்ற நிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, போராட்டக் களம் ஜந்தர் மந்தருக்குப் பதிலாக டெல்லி ஹாட்-க்கு மாற்றப்பட்டது. இதனை தனது சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா, போராட்டம் நடத்த அனைவரும் அங்கு திரளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பின், டெல்லி ஹாட் செல்லும் சாலைகளை மூடிய போலீஸார், உள்ளே இருந்த சந்தையையும் மூட உத்தரவிட்டனர். மேலும், அங்கே பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்களையும் விரைவாக அங்கிருந்து வெளியேற போலீஸார் அறிவுறுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேஹா போரா வெளியிட்ட மற்றொரு வீடியோ பதிவில், எங்கே தடுக்கப்படுகிறீர்களோ அங்கேயே சாலையில் அமர்ந்து போராடுங்கள் என்று ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வரும் போலீசார், போராட முனைபவர்களை உடனுக்குடன் கைது செய்து தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

இதனால், டெல்லியில் ஆங்காங்கே திடீர் திடீரென சிறு சிறு குழுக்களாக பலர் போராடுவதும் அவர்களை போலீஸார் கைது செய்வதுமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. பகல் 2 மணி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி