ஏதென்ஸில் இடிந்து விழுந்த கட்டிடம் – ஒருவர் பலி, பலர் மாயம்
மத்திய ஏதென்ஸின் சுற்றுலாப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 05 பேர் மாயமாகியுள்ளனர். ஒரு குடியிருப்பில் தங்கியிருந்த முதிய தம்பதியினரும், மற்றொரு குடியிருப்பில் தங்கியிருந்த சில சுற்றுலாப் பணிகளும் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்பு நாய்களின் உதவியுடன் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெடி விபத்துக்கான காரணம் இனங்காணப்படவில்லை என்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]




